இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் வந்தே பார்த் ரயில்கள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயிலை, இன்று  கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50க்கு எழும்பூர் வந்தடையும் ரயில், மீண்டும் எழும்பூரில் இருந்து 2.50க்கு புறப்பட்டு இரவு 10.40க்கு நெல்லை சென்றடையும். திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.