மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக ஒரு கார் மெதுவாக நகர்ந்து சென்றது. அப்போது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாக வந்தது. அந்த பைக் திடீரென காரின் மீது பயங்கரமாக மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை பார்த்தவுடன் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.

ஆனாலும் பைக் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் அதிலிருந்த இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து கடந்த 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் நடந்துள்ளது. ஹூக்லி பகுதியில் உள்ள போல் பார் ராஜ்காட் சந்திப்பில் விபத்து நடைபெற்ற நிலையில் கார் ரேஸ் நடந்ததாகவும் அதனால் வேகமாக சென்றதால் விபத்து நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.