திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில், நள்ளிரவில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பைப் பயன்படுத்திப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் வீட்டின் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தனது மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (வயது 24) என்ற வாலிபர், நள்ளிரவில் மணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, இருட்டில் தூங்கிக் கொண்டிருந்த மணியின் மனைவியைக் கட்டிப்பிடித்துச் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்து விழித்த அந்தப் பெண், தன்னைத் தொட்டது கணவர் இல்லை என்பதை உணர்ந்து சத்தமிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கணவர் மணி விழிப்பதற்குள், வாலிபர் அஜித் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தலைமறைவாக இருந்த வாலிபர் அஜித்தை போலீஸார் நேற்று அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
