சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலையில் பிரபல பார் அமைந்துள்ளது. கடந்த பத்தாம் தேதி மதுபோதையில் வந்த மூன்று கென்யா நாட்டுப் பெண்கள் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலையில் சென்ற பொது மக்களுக்கும் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் கென்யா நாட்டைச் சேர்ந்த விஜினியா, அனஸ்தடியா, போசியா என்பது தெரியவந்தது. இவர்கள் மருத்துவ காரணத்திற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்து தி நகரில் இருக்கும் அப்பார்ட்மெண்டில் தங்கி உள்ளனர். மேலும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மது குடித்துவிட்டு பாருக்குள் செல்ல அனுமதிக்குமாறு சுமார் இரண்டு மணி நேரமாக பெண்கள் பிரச்சினை செய்துள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
