தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (ஏப். 28) அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பட்டு வேஷ்டி, துண்டு அணிந்து சாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக நள்ளிரவில் மதுரை வந்த அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் திருச்செந்தூர் சென்ற விஜய்க்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் ‘வேல்’ வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

“>

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த திடீர் ஆன்மீகப் பயணம் வெற்றிக்கான வேண்டுதலா அல்லது நன்றி கடனா என அரசியல் வட்டாரங்களில் பலத்த விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் முடிவுகள் சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் அவர் முருகப் பெருமானைச் சரணடைந்துள்ளதாக தவெக தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.