
நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஜெகதீசன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி கீதா (36) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு ஜெகதீசன் தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சில மர்ம நபர்கள் அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டினர். இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஜெகதீசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் அவருடைய மனைவி கீதா உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.