
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கம்பம் மெட்டு ரோடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் சையது அபுதாஹீர்(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் சையது அபுதாகிர் அங்கிருந்து சென்றார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சையது அபுதாஹிரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு நான்கு ஆண்டுகள் ஜெயில் நினைத்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.