விஜய் தொலைக்காட்சியில் பிரபல பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பபட்டது. 15 வாரங்களாக நடந்துவந்த ‘பிக் பாஸ் சீசன் 6’ 2 தினங்களுக்கு முன்பாக நிறைவு பெற்றது.  இதில் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஒவ்வொருவராக நாமினேட் செய்யப்பட்டு கடைசியாக அசீம், ஷிவின், மற்றும் விக்ரமன் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டனர்.21 போட்டியாளர்களில் அசீமுக்கு டைட்டில் வின்னர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் சொன்னதை செய்து காட்டியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, அவர் தான் இந்த போட்டியில் ஜெயித்தால் பரிசுத் தொகை 50 லட்சத்தில், 25 லட்சத்தை கோவிட்டின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு தருவேன் என்று கூறியிருந்தார். தற்போது தான் உறுதியளித்தபடி அந்த 25 லட்சத்தை தர தயாராக உள்ளேன். இதற்கு தகுதியானவர்கள் அவரை தொடர்பு கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.