
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே காட்டில் வாழும் மிருகங்களின் வேட்டை என்பது பயங்கரமானதாக இருக்கும். தொலைக்காட்சியில் பார்க்கும் போதே பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தும். குறிப்பாக நரிகள் மிகவும் தந்திரமான முறையில் வேட்டையாடும். நரி தானாகவே வேட்டையாடி உண்பதும் உண்டு. பிற விலங்குகள் உண்டது போக மீதமுள்ள கழிவு மாமிசங்களை உண்ணும் பழக்கம் கொண்டது.
எனவே நரிக்கு எப்போதும் உணவு பிரச்சனை ஏற்படாது. மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் நரி தனது இருப்பிட எல்லையை தன் மலம் மற்றும் சிறுநீர் மூலமாக கண்டுபிடிக்கின்றது. அந்த வகையில் நரி ஒரு பறவையை வேட்டையாட பாய்ந்து பிடிக்கும் போது நூலிழையில் உயிர்தப்பிய பறவையின் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க