
மனதை கவரும் பல்வேறு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் விமானி விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமானி, எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க. பிளைட் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும். நம்ம ஊரு பிளைட்டுன்னு ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்காதீங்க. கிடைக்காது.
“நம்ம ஊரு Flight-ன்னு ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்டுடாதீங்க”
பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்த மதுரை விமானி#Madurai #Flight #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/YOEaC7u49e
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 14, 2025
உங்களுக்கு உதவி வேணும்னா எங்ககிட்ட தயங்காம கேளுங்க. உங்க பயணத்தை என்ஜாய் பண்ணுங்க என சிரித்துக் கொண்டே பேசினார். அப்போது விமானத்தில் அமர்ந்திருந்த பயணி முதல் ஃபிளைட் மதுரை மண்ணைச் சேர்ந்த நீங்க ஓட்டுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெருமையா இருக்கு என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.