
பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருப்பரங்குன்றத்திற்கு அசைவ உணவு கொண்டு வந்து கோவில்படியில் வைத்து சாப்பிட தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. பழனியில் தைப்பூசம் வரும் நிலையில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு தர்ச்சனை எவ்வளவு என சேகர் பாபு அறிவிக்கவில்லை. நம்மை பிடித்த ஒரு ஏழரை தான் இந்த சேகர்பாபு.
அவர் இந்துவே கிடையாது அவர் ஒரு Anti Hindu. இந்த கிரிப்டோவிடம் மாட்டிக்கொண்டு அறநிலையத்துறை தவிக்கிறது. அன்னதானம் வழங்குவது என்பது இந்துக்களின் கடமை. இதற்கு யாரிடம் வந்து அனுமதி பெற வேண்டும். என்னால் யாரிடமும் அனுமதி வாங்க முடியாது. நான் கொண்டு வந்து அன்னதானம் கொடுப்பேன் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் அமைச்சர் சேகர்பாபுவை இந்துவே கிடையாது என விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.