தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது கார் ரேசிலும் கலந்து கொண்டு வருகிறார். இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது கலைத்துறையில் சிறந்து சேவை ஆட்சி எதற்காக அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்மபூஷன் விருதுபெறும் நடிகர் அஜித்துக்கு தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தமிழ் மற்றும் இந்திய திரையுலகில் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித்குமார் அவர்கள் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது பெறுவதற்கு பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் எளிமையான பின்னணியிலிருந்து வந்து தனது மன உறுதி மற்றும் கடினமான உழைப்பின் காரணமாக பல துறைகளில் சாதனை படைத்து கோடிக்கணக்கானோர் இதயங்களில் அழியாத முத்திரையை பதித்த நம்முடைய நாயகனை அங்கீகரித்த பிரதமர் மோடிக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.