அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் லாரன் சாஞ்சஸ் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார். இருவரும் பல இடங்களுக்கு சுற்றி வந்தனர். இருவருக்கும் கடந்த மே மாதம் நிச்சயம் முடிந்தது. வருகிற 28-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி இவர்களது திருமணம் நடக்கப் போவதாகவும் அந்த திருமணத்திற்கு ஐந்தாயிரம் கோடி செலவு செய்துள்ளதாகவும் பிரபல பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டது. அதனை பார்த்து பலரும் திருமணத்திற்கு இவ்வளவு செலவு செய்கிறீர்களா என வியப்பில் இருந்தனர்.

அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த நிலையில் பெசோஸ் கூறும்போது, அந்த செய்தி முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் வாசிக்கும் எல்லாவற்றையும் நம்பி விடாதீர்கள் என்ற பழமொழி இன்றளவும் அதிக உண்மையாக இருக்கிறது. உண்மை ஆடையை அணிந்து புறப்படுவதற்கு முன் பொய்கள் உலகை சுற்றி வந்து விடுகின்றன. அதனால் மக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களை மிக எளிதில் நம்பி எளிதில் ஏமாந்து விடாதீர்கள் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.