கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மனித மனசாட்சியையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தெரு நாயுடன் நான்கு பேர் இயற்கைக்கு மாறான உறவு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயல் குறித்து பெங்களூருவில் உள்ள வெள்ளலசந்திரா காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “தெரு நாயுடன் நான்கு இளைஞர்கள் இயற்கைக்கு மாறான உறவு கொண்டுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட அந்த நாய்க்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் பேரில், வெள்ளலசந்திரா போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, கொடூரச் செயலில் ஈடுபட்ட அந்த இளைஞர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு உயிரற்ற பொருளைப் போல ஒரு விலங்கிடம் மனிதர்கள் இவ்வாறு நடந்து கொள்வது கடும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதுடன், விலங்குகள் மீதான வன்முறையைத் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்பதையே இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
