
மாமல்லபுரத்தில் பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக செய்து வருகிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான அழைப்பிதழ் பல்வேறு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சித்திரை முழுநிலவு மாநாட்டை முன்னிட்டு புதுச்சேரியில் மதுபான கடைகளிலும் கூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் பாமக மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகிறேன். நமது பண்பாட்டையும் அனைவருக்குமான சமூக நீதியையும் வென்றெடுக்க மாநாடு வழிவகுக்கட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.