
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து வரிவிதிப்பு உட்பட பல திட்டங்களை நிறைவேற்றும் படி உத்தரவுகளில் கையெழுத்துட்டு வருகிறார். இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒரே வரிவிதிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவர் கூறுகையில் ‘உங்களிடம் ஒரு சிறந்த பிரதமர் பற்றி பேச விரும்புகிறேன். பிரதமர் மோடி ஒரு புத்திசாலி மற்றும் என் சிறந்த நண்பர் ஆவார். உலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையேயான வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சிறப்பாக செயல்படும்’.
இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் மோடி அவரை நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.