செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இந்த ஆண்டு வேகமான வளர்ச்சியை கண்டுள்ள நிலையில், AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக கவனம் பெற்றுவருகின்றன.
அந்த வகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி எடுத்தது போன்ற AI வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் SELFIE எடுப்பதுபோல் !!!! pic.twitter.com/HzY1fjnweL
— Sellur K Raju (@SellurKRajuoffl) December 21, 2025
அந்த பதிவில், “நண்பர்களே, இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதய தெய்வங்களோடு நான் செல்பி எடுப்பது போல்…” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு கருத்து தெரிவித்த ஒருவர், “AI-ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவு தூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா சார்?” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “நண்பரே, மன்னிக்கவும். தப்புதான்” என பதிலளித்துள்ளார்.
இந்த AI பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
