தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஷ்ரவன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு இ-காமஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த வாலிபர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கர்நாடகாவில் உள்ள சிக்க மங்களூர் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். இவர் ஒரு பாறை மீது ஏறி குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தவறி தண்ணீரில் விழுந்தார்.

இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு வாலிபரை மீட்டனர். அப்போது ஒரு மருத்துவர் அங்கு இருந்ததால் அவர் உடனடியாக முதலுதவி கொடுத்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு வாலிபரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.