
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் காடே பஜாரில் காஞ்சர் கல்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தன்னுடைய கடையை அமைக்க வேண்டும் என்று சுஃபியான் பதான் (42) என்பவர் விரும்பினார். இதற்காக அவர் முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் அயன் தேசாய் என்ற மற்றொரு வியாபாரியுடன் அவருக்கு தகறாறு ஏற்பட்டது. இந்நிலையில் நடைபாதையில் தன்னுடைய கடையை அமைக்க சுஃபியான் விரித்தார்.
அப்போது அயன் தேசாய்க்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் தகராறு முற்றவே கோபத்தில் அயன் தேசாய் அவருடைய மூக்கை கத்தியால் வெட்டி விட்டார். இதில் சுஃபியான் பதான் பலத்த காயம் அடைந்த நிலையில் இந்த தாக்குதலில் சமீர் பதான் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைமாக உள்ள அயன் தேசாயை வலை வீசி தேடி வருகிறார்கள்.