பெங்களூரில் தொட்டஹல்லி என்ற பகுதியில் உள்ள சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் ஓட்டுநர் இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் திரும்பியுள்ளார். இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பாதிப்புக்கு உள்ளானார். இதில் கோபமடைந்த இருசக்கர வாகன ஓட்டி கார் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருப்பினும் அவர் காரைவிட்டு கீழே இறங்காததால் கண்ணாடியை உடைத்து, காரில் வந்த தம்பதியினரிடம் ரகலையில் ஈடுபட்டுள்ளார். இதையெல்லாம் அந்த ஓட்டுநர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்பு அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த காவல்துறையினர் இருசக்கர வாகன ஓட்டியை கண்டுபிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

“>