தமிழில் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரேகா. இவர் வெள்ளி திரையிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் மஞ்சன் (55) என்பவர் குடிபோதையில் படுத்து தூங்கினார். இவர் மீது நடிகை ரேகாவின் கார் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ளவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாண்டி(22) என்பவரை கைது செய்துள்ளனர். இவர் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய கார் நடிகை ரேகாவின் பெயரில் இருக்கிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.