தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்‌. இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா, ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் அடிக்கசி கிசுகிசுக்கள் பரவி வருந்தது. இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோவில், தமன்னாவும் விஜய் வர்மாவும் நேற்று இரவு உணவுக்குப் பின் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்து காரில் சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்களுடைய காதல் உண்மை தான் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.