நடிகையும் பாஜக நிர்வாகியுமான கங்கனா ரணாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தன்னை அதிகாரி தாக்கியதாக கங்கனா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். டெல்லிக்கு அவர் செல்லும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக சர்ச்சை கருத்தை அவர் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் அதற்காக தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் கங்கனா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.