ராகுல் காந்தி ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. நடைபயணம் உத்திரபிரதேசத்தில் நுழைந்துள்ள நிலையில் அங்கு பேசிய ராகுல்காந்தி ராமர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவைப் பார்த்தீர்களா?.

அங்கு ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முகம் தான் இருந்ததா?. அங்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் நரேந்திர மோடி தான் இருந்தனர் என கூறியுள்ளார். இந்நிலையில் அவரின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.