சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில்போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார். அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் இசையமைப்பாளர் தேவா மற்றும் நடிகர் வடிவேலு ஆகியோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றை ஏமாற்றி தனியார் நிறுவனம் நிகழ்ச்சி நடத்தி போலி டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டமளிப்பு விழாவுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகையும் தமிழக அரசும் தெரிவித்துள்ளது.