நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சில நாட்களாக பாலா சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா தமிழ் மற்றும் மலையாள உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் இணைந்த வீரம் திரைப்படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார். சமீபத்தில் இவர் படபிடிப்பின் போது கண்ணில் சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் பொதுவெளியில் கண்ணாடி அணிந்து நடமாடி வந்தது குறிப்பிடத்தக்கது.