தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயினாக மட்டுமின்றி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருவதால் நடிகை வரலட்சுமிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த வரலட்சுமி சரத்குமார் அண்மையில் தன்னை வாய்ப்புக்காக பிரபலங்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைல்ட் சென்டரில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார் அதன் பின் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது டிவி சேனல் தலைவர் ஒருவர் என் வீட்டிற்கு வந்து ஒரு நிகழ்ச்சி குறித்து பேசினார். அதன் பிறகு மற்ற விஷயங்களுக்காக எப்போது நாம் ஹோட்டலில் சந்திக்கலாம் என்று கேட்டார். என் வீட்டிற்கே வந்து என்னை ஹோட்டலுக்கு அழைத்தார். யாராவது இப்படி கேட்டால் நான் அவர்களை ஓங்கி அறைந்து விடுவேன்.

ஆனால் அன்று அவரை நான் விட்டு விட்டேன். அதன்பிறகு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று என் வழக்கறிஞரிடம் ஆலோசித்தேன். ஆனால் அதற்கு பல வருடங்கள் ஆகும் என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் மகிலா நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பதற்காக அனைவரிடமும் கையெழுத்து வாங்க தொடங்கியதாகவும், அதன் பிறகே சேவ் சக்தி அமைப்பு தொடங்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் வீட்டுக்கே வந்து ஒருவர் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக வரலட்சுமி சரத்குமார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.