தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. இவர் தற்போது வசந்த முல்லை என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் வசந்த கோகிலா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா உடன் சேர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு கன்னட சினிமாவில் நடிகர்‌ ரக்ஷித் ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று  வெளியான நிலையில் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியும் கன்னடத்தில் சிவராஜ்குமாரும் டீசரை வெளியிட்டனர்.

ஆனால் தமிழில் ஒரு ஹீரோ கூட வெளியிடவில்லை. இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது நடிகர் பாபி சிம்ஹா ஒரு பெரிய ஹீரோவை வைத்து டீசரை வெளியிடலாம் என்று திட்டமிட்ட நிலையில் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்று கூறினார். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் டீசரை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நடித்துக் கொடுத்த நடிகர் ஆர்யா மற்றும் டீசரை வெளியிட்ட சிவராஜ்குமார், சிரஞ்சீவி ஆகியோருக்கு நடிகர் பாபி சிம்ஹா நன்றி தெரிவித்தார்.