
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நயன்தாரா நடித்துள்ள ஆணவ படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தனுஷ் மீது பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்து அவரை சரமாரியாக விளாசி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை பயன்படுத்துவதற்கு நடிகர் தனுஷிடம் 2 வருடங்களாக அனுமதி கேட்டதாகவும் ஆனால் அதற்கு நடிகர் தனுஷ் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறிய நயன்தாரா வெறும் 3 நிமிட காட்சியை பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது ஒரு கீழ்த்தரமான செயல் என்று விமர்சித்துள்ளார். அதோடு தனுஷ் அண்ணன் மற்றும் அப்பா தயவால் தான் சினிமாவில் முன்னேறி உள்ளதாகவும் தான் சொந்த காலில் நின்று சினிமாவில் ஜெய்த்துள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையில் இயக்குனரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் வாழு இல்ல வாழ விடு என்று நடிகர் தனுஷை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். ஆனால் தற்போது திடீரென அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார். இந்த தலைப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்ட தனுசை விமர்சித்து பேசிய நிலையில் தற்போது அந்த வீடியோவை அவர் நீக்கியது பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் அவர் தனுஷை கடுமையாக தாக்கி பேசிய நிலையில் திடீரென வீடியோ பதிவை நீக்கியது கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில் இதற்கான காரணம் என்னவென்று சரிவர தெரியவில்லை.