
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில் முதல் பாகத்தின் சூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நிலையில் விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் மற்றும் அனன்யா பட் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.