தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்திலும், ஹிந்தி படம் ஒன்றிலும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்ற 2021ம் வருடத்தில் இருந்தே தெலுங்கு சினிமாவின் டைரக்டர் போயபட்டி சீனு இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் போயபட்டி சீனு விரைவில் சூர்யா வைத்து புது படத்தை இயக்க இருக்கிறாராம். இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது என்றும் இதுபற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.