தொகுப்பாளராக திரையுலகில் தந்த பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ரிலீசான அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக மதராசி, பராசக்தி ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தான் மதராசி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தனர். அடுத்ததாக பராசக்தி படபிடிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் ட்ராவல் அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை கயாடு லோஹர் நடிகர்களாக தகவல் வெளியானது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கயாடு லோஹர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்த டிராகன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.