விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் நட்புனா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு கவின் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது டாடா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ள நிலையில், ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் பாக்யராஜ் மற்றும் அபர்ணாதாஸ் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

https://youtu.be/23mMdgo0prk ‌