பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வென்றவர் அசீம். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது நடிகர் கமல்ஹாசன் நீங்கள் வீட்டுக்குள் இந்த மாதிரி நடந்து கொண்டால் உங்கள் மகன் நிகழ்ச்சியை பார்த்து அதை ஒரு தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டானா என அசீமிடம் கேள்வி இருந்தார்.  நடிகர் அசீம் என்னுடைய மகனுடன் நான் நேரத்தை செலவழிக்க பல்லாயிரக்கணக்கான நாட்கள் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் என் மகன் வளர வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறி இருந்தார்.

அசீமின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்ததோடு கமல்ஹாசனை தாக்கி பேசியதாகவும் கூறினர். இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அசீம் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் உங்களுடைய நேரத்தை மற்றவர்களிடம் அன்பு காட்டுவதற்காக செலவிடுங்கள். வெறுப்பை காட்டுவதற்கு செலவிட வேண்டாம். நான் கமல் சாரை தாக்கி பேசவில்லை. இது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம். கமல் சார் எனக்கு தந்தை போன்றவர் என்று கூறியுள்ளார். மேலும் அசிமீன் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/actor_azeem/status/1624389832138194944?s=20&t=aXq1xgYGRURw_EHbxQeTgQ