
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருடைய புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியின் போது சந்தியா தியேட்டரில் அல்லு அர்ஜுனை காண வந்த ரசிகை ரேவதி உயிரிழந்தார். அவருடைய மகன் ஸ்ரீதேஜ் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பெண் ஜாமினில் வெளியே வந்தார். அவருடைய வீட்டின் மீது நேற்றே உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு அல்லு அர்ஜுன் தான் ரசிகையின் உயிரிழப்புக்கு முழு காரணம் என்று தெலுங்கானா முதல்வரும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதன்பிறகு தெலுங்கானா போலீஸ் உச்சநீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளது. அதோடு அவர் நடித்த புஷ்பா படத்திற்காக தேசிய விருது வென்ற நிலையில் அது செம்மர கடத்தலை ஊக்குவிக்கும் படம் என்பதால் அந்த தேசிய விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேலும் இந்த நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிக்கிட பள்ளி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது நாளை காலை 11:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.