சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லை பகுதியிலுள்ள கர்ரேகுட்டலு மலை பகுதிகளில் நடைபெற்று வந்த முக்கிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, CRPF படையில் இருந்த K9 நாய் ரோலோ திடீரென ஏற்பட்ட தேனீக்களின் தாக்குதலால் உயிரிழந்தது. 2 வயதான பெல்ஜிய ஷெப்பர்ட் நாயான ரோலோ, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் தாக்குதல் பணிகளில் பயிற்சி பெற்ற சிறப்பு நாய் ஆகும். கடந்த 2024 ஏப்ரலில் 228-வது படைத்தளத்தில் நக்சல் எதிர்ப்பு பணிக்கு இந்த நாய் இணைக்கப்பட்டது..

ஏப்ரல் 27, 2025 அன்று நடந்த ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ என்ற பெயரில் நடந்த பெரிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, K9 ரோலோ நாய் தனது குழுவுடன் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டது. அப்போது திடீரென ஒரு பெரிய தேனீ கூட்டம் அவர்களை தாக்கியது.

“>

 

ரோலோவை காப்பாற்ற அருகில் இருந்தவர்கள் பாலிதீன் தாளால் மூடினாலும், தேனீக்கள் ஊடுருவி கடித்ததால், ரோலோ கடுமையான வலி மற்றும் கோபத்தில் பாலிதீன் தாளை கிழித்துவிட்டு வெளியேறியது. இதனையடுத்து, 200-க்கும் மேற்பட்ட தேனீக்கள் கடித்ததால் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டும், ரோலோ சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

கால்நடை மருத்துவரால் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது. 2023 ஏப்ரல் 5 அன்று பிறந்த ரோலோ, சிறந்த பயிற்சியுடன் பல ஆபத்தான நக்சல் பகுதிகளில் வெற்றிகரமாக பணியாற்றியது. அதன்  சேவைக்கு மதிப்பளிக்க, CRPF அதிகாரிகள், வீரர்கள் முன்னிலையில் முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.