
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் லட்சுமி (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் 5 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள நிலையில் தற்போது காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதாவது சிவச்சந்திரன் என்பவர் தன்னுடைய தாயாருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அவரை அனுமதித்தபோது நிஷாந்தி என்பவர் தான் ஒரு டாக்டர் எனக்கூறி அவரிடம் அறிமுகமாகியுள்ளார். அவர்கள் இருவரும் பழகி வந்த நிலையில் பின்னர் காதலித்து கடந்த 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெப்போலியன் (34) என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு மீரா என்ற பெயரில் நிஷாந்தி அவருக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் எதுவுமே சொல்லாமல் நிஷாந்தி அவரை பிரிந்து சென்றுள்ளார். அதன்பிறகு அவரை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பார்த்ததாக புகார் கொடுத்துள்ளார்.
தன்னை ஏமாற்றிய மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் கொடுத்திருந்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நிஷாந்தி என்கிற லட்சுமியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தது. அதாவது இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தர்ஷன் என்ற மகனும் ரேணுகா என்கிற மகளும் இருக்கிறார்கள். இவருடைய கணவர் 10 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டதால் தன்னுடைய பெண் குழந்தையை தன்னுடைய கணவனின் அண்ணனான ஜெயக்குமார் என்பவரது பராமரிப்பில் விட்டுள்ளார். பின்னர் தன்னுடைய ஆண் குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நெப்போலியன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிதம்பரத்தைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் தான் ஒரு டாக்டர் எனக் கூறி அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். இதேபோன்று ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இவர் மொத்தமாக 5 பேரை திருமணம் செய்த நிலையில் பணம் நகை போன்றவற்றை அவர்களிடமிருந்து மோசடி செய்யவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக லட்சுமியிடம் விசாரணை நடத்தியதில் ஒன்றை விட இன்னொன்று பெஸ்டாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இத்தனை பேரை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது.