
நடப்பு ஐபிஎல் தொடர் எட்டாவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றியை பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் நூர் அகமது கைப்பற்றிய மூன்று விக்கெட்டுகளையும் சேர்த்து நடப்பு தொடரில் இதுவரை ஏழு விக்கெட் வீழ்த்திய நூர் அகமது அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களுக்கு வழங்கப்படும் உதா நிற தொப்பியை கைப்பற்றினார்,. தொப்பி வழங்கும் நிகழ்வில் பேசிய அவர், “ஊதா நிற தொப்பிக்கு உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன். தொடரில் இறுதிவரை வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். ஸ்டெம்பிற்கு பின்னால் தோனி இருப்பது எனக்கு அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது CSK மண்ணை கவ்வியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.