கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பொது நிவாரண நிதிக்கு நிலச்சரிவு பணிகளுக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் கேரளாவுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார்கள். அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நிவாரண நிதிக்காக பணம் அனுப்பியுள்ளனர். இதேபோன்று தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரும் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளனர். மேலும் அதன்படி தற்போது இவர்கள் ரூ.20 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.