
மத்திய அரசானது தொழில் தொடங்குபவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் உத்யோகினி என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் கிராமத்து பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலமாக விவசாயம் செய்யும் பெண்களுக்கு வட்டியில்லா கடனும் கொடுக்கப்படுகிறது.மேலும் இந்த திட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.