இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக போலி போன் கால்கள் மூலம் ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து விட்டது. முகம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசி மூலமாக அளிக்கும் தொந்தரவுகளாலும் மிரட்டல்களாலும் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும் என்றால் 181 மற்றும் 1091 ஆகிய ஹெல்ப்லைன் எண்களில் புகார் அளிக்கலாம். 100 என்ற எண்ணில் ஆண் பெண் இருபாலரும் புகார் அளிக்கலாம். அதன் மீது புகார் பதிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்கும்