சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல காரணங்களால் ஏற்படும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளான தொண்டை வலி மற்றும் தொண்டை தொற்று அல்லது அலர்ஜிக்கு சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த உப்பு நீர் தொண்டை வலி அல்லது எரிச்சல் தொடர்புடைய அசாவுகரியங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. சளி மற்றும் சைனஸ் தொற்றுகளை தடுக்கவும் இந்த உப்பு கரைசல் உதவி புரிகிறது.

அதனைப் போலவே சாதாரண தண்ணீரில் சில துண்டுகள் நறுக்கிய இஞ்சி போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை அருந்தினால் தொண்டை கரகரப்பு பிரச்சனை தீரும். அதனுடன் தேன் சேர்த்தும் பருகலாம்.இனி இது போன்ற பிரச்சனைகளுக்கு உப்பு கரைசலை ட்ரை பண்ணுங்க.