நாம் தினசரி சாப்பிடும் உணவுகளில் சிலவற்றை சேர்த்துக் கொண்டால் உடல் நலமும் மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும். அதன்படி தினமும் பாதாம் சாப்பிடுவதால் இதய நோய் வராமல் தடுக்கலாம். ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் படிப்படியாக குறையும். தினமும் பாதாம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்ற கருத்து உண்மை தான்.மேலும் ஊறவைத்த பாதாம், ஆன்டிஆக்ஸிடண்ட்டின்கள் நிறைந்தள்ளது. பாதாம் பருப்பின் வெளிப்புற தோலை நீக்கி சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்.