நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அரிய வகை மலர்கள், தாவரங்கள், மூலிகைகள் இருக்கிறது. இந்நிலையில் குளிர் பிரதேசங்களில் காணப்படும் ரோடோடென்ரன் மரங்கள் நீலகிரியில் மட்டுமே இருக்கிறது. வருடம் தோறும் இந்த மரங்களில் டிசம்பர் மாதம் சிவப்பு நிற ரோஜா மலரை போன்ற மலர்கள் பூக்கும். தற்போது கால மாற்றத்தால் அடர் சிவப்பு மற்றும் வெளிர் சிவப்பு நிறத்தில் ஜனவரி மாதம் வரை இந்த மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.