
கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சுப்பறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு 2200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சுப் பாறை அணை நீர்மட்டம் 45.46 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 63.80 அடியாகவும் உள்ளது.
பேச்சுப் பாறை அணை பகுதியில் 5 சென்டிமீட்டர் மழையும், பெருஞ்சாணி அணைப்பகுதியில் 4.25 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கோதையாறு, குழித்துறை, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.