சென்னை கலைவாணர் அரங்கில் குடியரசு தின விழா பேரணியில் கலந்து கொண்ட என்சிசி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சென்னையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. கண்டிப்பாக போலீசார் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்கள என்றார்.

அதன் பிறகு இது பெரியார் மண் கிடையாது என்றும் பெரியாரே ஒரு மண் தான் என்றும் சீமான் பெரியாரைப் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் சீமான் பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார். மேலும் தொடர்ந்து  சீமான் பெரியாரைப் பற்றி விமர்சித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் சீமானுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.