துருக்கியைச் சேர்ந்த 26 வயது இன்ஸ்டாகிராம் பிரபலம் குப்ரா அய்குட் கடந்த ஆண்டு தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். சமீபத்தில், அவர் தனது வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் துருக்கியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடலின் அருகில் கிடைத்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்ரா அய்குட் தற்கொலைக்கு முன்னதாக  வீடியோவில்   தனது உடல் எடை குறைவது குறித்து சமூக வலைதளத்தில் பதிவுகள் செய்துள்ளார்.  தனது கடைசி வீடியோவில், “என்னை உடல் எடை அதிகரிப்பது மிகவும் சவாலாக உள்ளது. எடை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், ஆனால் தினசரி எனது எடை ஒரு கிலோ குறைந்து கொண்டே இருக்கிறது” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். இந்த உடல் எடை குறைபாட்டால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது மரணத்திற்கான சூழ்நிலையை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர், மேலும் சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. பலரை திகைக்க வைத்த அந்த குறிப்பில், “நான் என் சொந்த விருப்பத்தின் பேரில் குதித்தேன். ஏனென்றால் நான் இனி வாழ விரும்பவில்லை. செல்ல பிராணி  ஃபிஸ்டிக்கை நன்றாகக் கவனித்துக்கொள்” என்று . அவர்  மேலும், “என் வாழ்க்கையில் நான் எல்லோருக்கும் நல்லவனாக இருந்தேன், ஆனால் என்னால் எனக்கு நல்லவனாக இருக்க முடியவில்லை. இந்த வாழ்க்கையில், சுயநலமாக இருங்கள். அந்த வழியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

அவரது தற்கொலை காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை, ஆனால் அவர் சமீப காலமாக மன அழுத்தத்தை சந்தித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிகிறது.  இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர் .. விசாரணைக்கு பின் தற்கொலை செய்ததற்கான  உண்மை தெரியவரும்.. இந்த சம்பவம் அவரின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது