திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய இறுதியான நிலையில் அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த இழுப்பறி முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. அதன்படி பாமக 7 , தேமுதிக 3, புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1, புரட்சி பாரதம் 1 தொகுதிகளை வழங்க இபிஎஸ் இறுதி முடிவை எடுத்துள்ளார். இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் பட்சத்தில் இரண்டு தொகுதிகள் வரை ஒதுக்கப்படும். மீதமுள்ள 25 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகின்றது.