
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மின் கம்பத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானாவில் மோகன் பாபு என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் மோகன் பாபுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோகன் பாபு வீட்டை விட்டு வெளியேறி அந்த பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறினார். இதுகுறித்து போலீசாருக்கும் மின்வாரிய துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் மோகன் பாபுவை மீட்க முயற்சி செய்தனர். அப்போது மோகன் பாபு தன்னிடமிருந்த சிகரெட்டை பற்ற வைத்து எழுந்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 1 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அவரை கீழே இறக்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.