இமாச்சலப் பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது மாநில அரசு.

அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து தேர்வாணையத்தை கலைத்து இமாச்சல அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து துறை வாரியாகவும், காவல்துறை மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகவே இமாச்சல பிரதேச தேர்வாணைய வினாத்தாள்கள் இடைத்தரகர்களுக்கு தரப்பட்டது விசாரணையில் அம்பலமானது. புகாருக்குள்ளான தேர்வாணைய ஊழியர்கள் மீது விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் அறிவித்துள்ளார். தேர்வாணைய ஊழியர்கள் அனைவரும் வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.